Posts
அமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்
- Get link
- X
- Other Apps
கரோனா தொற்றின் எதிரொலியாக, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பவர்களின் அடையாளத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சரிபார்க்கும் வேலையை அமேசான் தளம் ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த சரிபார்க்கும் முயற்சி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் இதுவரை, 1000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அமேசானில் பதிவு செய்ய முயன்றுள்ளனர். இது விரைவில் அமேசான் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு, 25 லட்சம் நம்பத்தகாத விற்பனையாளர்களை, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பதிலிருந்து தடுத்துள்ளதாக அமேசான் கூறியுள்ளது. "சமூக விலகலை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமேசான் தளத்தின் வருங்கால விற்பனையாளர்களின் அடையாளத்தை வீடியோ மூலம் சரிபார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதனால் அந்தந்த விற்பனையாளர்களுடன் நேரடியாகப் பேச முடிவதோடு, மோசடி செய்ய நினைப்பவர்கள் ஒளிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ...
நீங்களும் ஆன்லைன் ஆசிரியராக..
- Get link
- X
- Other Apps
நீங்களும் ஆன்லைன் ஆசிரியராக, உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை கொண்டு செல்வதற்கான நேரம் இது. மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்ற,நீங்களூம் ஆன்லைன் ஆசிரியாவதற்கான அனைத்து வழிமுறைகள் எளிய தமிழில் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். இந்த ஆன்லைன் நேரடி வகுப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். Date : 28.05.2020 Time 10.30 am to 12.00 pm இதில் யார் பங்கேற்கலாம்: 1) பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள். 2) ஆராய்ச்சி மாணவர்கள் . 3) இணையவழி கற்பித்தலில் ஆர்வமுடைய அனைவரும் பங்கேற்கலாம். கற்பிக்கப்படும் பாடங்கள்: 1)இணைய வழி கற்றலின் பயன்கள். 2)இணையவழி கற்றல் முறைகள். 3)இணையவழி கற்றலுக்கு தேவையான உபகரணங்கள். 4)இணையம் வழி கற்றலுக்கு தேவையான இலவச மென்பொருட்கள் 5)கணினி மடிக்கணினி அல்லது உங்களது செல்பேசி வழியாக பாடம் கற்பித்தல் முறைகள். கட்டணம் ரூபாய்250 (ஒரு நபருக்கு) குறிப்புகள்: 1)முதலில் பதிவு செய்யும் 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி 2)இந்த இணைய வழி கற்றலில் பதிவு செய்து பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும். 3)இந்த இணைய வழி கற்றலில் பங்குப...
'ஆன்லைன்' வகுப்புக்கு தனி இ-மெயில்: கல்லூரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
- Get link
- X
- Other Apps
திருப்பூர்:திருப்பூர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், 'இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான மொபைல் பயன்பாடு' குறித்த, 'வெப்பினார்' கருத்தரங்கு நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார். துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். பேராசிரியர்கள், அனைத்து துறை மாணவிகள், பிற மாவட்ட கல்லுாரி மாணவிகள் என, 150 பேர் பங்கேற்றனர். கொரோனாவால் அதிகரித்து வரும் இணைய பயன்பாட்டால், சைபர் குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பதை, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, டிஜிட்டல் மற்றும் சைபர் தடயவியல் அறிவியல்துறை தலைவர் தனராஜ் கலந்துரையாடினார்.அவர் பேசியதாவது:பெரும்பாலான கல்லுாரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. 'வெப்பினார்'ல் பங்கேற்க இமெயில் ஐ.டி., மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் சைபர் திருட்டுகள் நடக்க அதிக வாய்ப்புண்டு.எனவே, மாணவியர் தனிப்பட இ-மெயில் ஐ.டி., கொடுப்பதற்கு பதில், இதற்கென பிரத்யேக ஐ.டி., யை உருவாக்கி...